.webp)
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான பிரிஸ்பேனை(Brisbane) அண்மித்துள்ள அரிய கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூரியுள்ளது.
இதனால் குறித்த பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரையினை நோக்கி வீசும் சுழற்காற்றானது நாளை (07) கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வோல்ஸ் மாநிலங்களின் கரையோரங்களில் 500 கிலோமீற்றர் வேகத்தில் நேற்று (05) காற்று வீசியுள்ளது.
இதனால், பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.