.webp)
Colombo (News 1st) 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து வந்துள்ள குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.