மித்தெனிய முக்கொலை : துப்பாக்கிதாரி கைது

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

by Staff Writer 05-03-2025 | 6:13 PM

Colombo (News 1st) மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியென சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்ய்பபட்டுள்ளார்.

மித்தெனிய பகுதியில் தலைமறைவாகியிருந்த 42 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் சந்தேகநபர் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மித்தெனிய பகுதியிலுள்ள கற்குழியொன்றுக்குள் கைவிப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுழியோடியின் ஒத்துழைப்புடன் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரின் 6 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.