.webp)
Colombo (News 1st) போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகின்றது.
இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த முதலாம் திகதி பதில் பொலிஸ் மாஅதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து உத்தியோகத்தர்களின் கடமைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.