டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க கைது

டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க கைது

by Staff Writer 05-03-2025 | 2:22 PM

Colombo (News 1st) டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று(05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைதாகியுள்ளார்.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்க சென்றிருந்தார்.

இந்த விசாரணை தொடர்பில் இதற்கு முன்னர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.