கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது...

by Staff Writer 02-03-2025 | 5:07 PM

Colombo (News 1st) இலங்கையின் முன்னணி இசை, ஊடக ஆளுமை கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் இன்று(02) அக்கினியில் சங்கமமானது.

'கலாசூரி', 'தேச நேத்ரு', கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவுஸ்திரேலியாவில் கடந்த 17ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் புகழுடல் கடந்த வியாழக்கிழமை நாட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் கடந்த 3 நாட்களாக வௌ்ளவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல்வேறு பரிணாமங்களை கொண்டு மிளிர்ந்த ஆளுமையாவார்.

அன்னார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் என்பவற்றை கற்பிக்கும் விரிவுரையாளராகவும் கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை பொரளை பொதுமயானத்தில் நடைபெற்றது.

ஏனைய செய்திகள்