தேஷபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 28-02-2025 | 7:08 PM

Colombo (News 1st) முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை - பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைகளுக்கு அமைவாக அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி என்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக்காக சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.