.webp)
Colombo (News 1st) ஐந்து வருடங்களின் பின்னர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஒருதொகுதி கொழும்பு துறைமுகத்தை இன்று(25) வந்தடைந்தது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை அயடுத்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் இறக்குமதியாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட 6 கெப் ரக வாகனங்கள்
தாய்லாந்திலிருந்து கொழும்பிற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டன.
நாளையும் நாளை மறுதினமும் வாகனங்களின் இன்னுமொரு தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான வாகனங்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து கொள்வனவு செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.