.webp)
Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரின் 48 வயதான தாயும், 23 வயதான இளைய சகோரனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
ஆட் கொலை தொடர்பான தகவல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்து குற்றமிழைக்க ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அது குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.