.webp)
Colombo (News 1st) கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் லொறியொன்றில் கஞ்சா தொகையை கொண்டுசென்ற போதே கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.