ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்

by Staff Writer 24-02-2025 | 5:52 PM

Colombo (News 1st) ஜனாதிபதி தமது ஊடக செயற்பாடுகளுக்காக 3 புதிய நியமனங்களை இன்று(24) வழங்கினார்.

அதனடிப்படையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ஆலோசகராக சந்தன சூரியபண்டார மற்றும் சர்வதேச ஊடக, தொடர்பாடல் பணிப்பாளராக அனுருத்த லொகுஹபு ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.