மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 36 வயதானவர் உயிரிழப்பு

by Staff Writer 23-02-2025 | 10:16 PM

Colombo (News 1st) பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனாகல வீதி, கல்வள பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்றைய இந்த அனர்த்தத்தில் சிக்கி 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீடொன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது குறித்த நபர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சக ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் மீட்டெடுத்து பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில்
அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.