கணேமுல்ல சஞ்சீவ கொலை ; மேலும் மூவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; மேலும் மூவர் கைது

by Staff Writer 23-02-2025 | 2:34 PM

Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் அஸ்கிரிய, கம்பஹா மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளில் கைதாகியுள்ளனர்.

19, 22, 25 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்தமை முதல் குற்றம் இடம்பெறுவதற்கு முதல் நாளில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் ஹொரணேகாரகே தமிந்து லக்‌ஷான் என்பவரும்

சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரியையும் தப்பிச்சென்ற பெண்ணையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் தமித் அஞ்சன நயனஜித் மற்றும் சமோத் கிமிஹான ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சஞ்சீவ சமரக்கோன் எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.