சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது

by Staff Writer 21-02-2025 | 7:39 PM

Colombo (News 1st) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, புத்தளம், கற்பிட்டி, தோப்பூர், முள்ளியான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

12 மீன்பிடி படகுகள், 156 சட்டவிரோத வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்குகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.