.webp)
Colombo (News 1st) உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலமொன்று இன்று(21) காலை கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் கடவத்தையைச் சேர்ந்த 40 வயதான அயோஷாந்த போப்பே ஆராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றிரவு(20) அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிப்படுவதுடன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்ட சி.சி.ரி.வி காணொளியும் தற்போது வௌியாகியுள்ளது.
சடலத்திற்கு அருகில் காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியின் 9 வெற்றுத் தோட்டாக்களும் ஒரு ரவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.