.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை அந்தந்த வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் வழங்கும் நடவடிக்கையை இவ்வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று ஆணைக்குழுவுக்கு கிடைக்குமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறினார்.
அதன்பின்னர் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 80,000-இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
தேர்தலை 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கமைய நத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
இதனிடையே 2023ஆம் ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை அழிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியது.