.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதியை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பமாக வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆவது சரத்தின் முதலாவது உப பிரிவின் (ஆ) சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய பொதுநிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் A.H.M.H.அபேரத்னவினால் இதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.