.webp)
Colombo (News 1st) பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாச நோய்க்கான சிகிச்சைகளுக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பரிசுத்த பாப்பரசரின் அனைத்து பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வத்திக்கான் மாளிகை அறிவித்துள்ளது.வைத்தியசாலை
யில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பாப்பரசரின் உடல்நிலை பாரதூரமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.