ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

by Staff Writer 13-02-2025 | 9:38 AM

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(13) காலை நாடு திரும்பினார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, துபாயில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் பங்குபற்றிய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கடந்த 10ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.