மியன்மாரில் சிக்கியிருந்த 260 பேர் மீட்பு

மியன்மாரில் கணினி குற்றவாளிகளிடம் சிக்கியிருந்த 260 பேர் மீட்பு

by Staff Writer 12-02-2025 | 10:33 PM

Colombo (News 1st) மியன்மாரில் கணினி குற்றவாளிகளிடம் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 260 பேர் மியன்மார் இராணுவத்தினர் இன்று(12) மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மியன்மாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கணினி குற்றவாளிகளிடம் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மியன்மாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகிறது.

ஏற்கனவே 3 சந்தர்ப்பங்களில் சுமார் 50 பேர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.