கைவிடப்பட்ட நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானம்

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் கைவிடப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய தீர்மானம்

by Staff Writer 12-02-2025 | 11:55 AM

Colombo (News 1st) கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரத்திற்குட்பட்ட பல பிரதேச மட்டங்களில் இத்தகைய வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன் செனவிரத்ன கூறினார்.

பாலங்கள், வளைவுகள் மற்றும் கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத் திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகள் உரிய திட்டமிட் இன்றி ஆரம்பிக்கப்பட்டமையினால் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுனார். 

வேலைத் திட்டங்கள் முடிவுறுத்தப்படாமையினால் அவற்றின் பலனை பெற்றுக்கொள்ளவிருந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சர் ருவன் செனவிரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து எதிர்வரும் வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக இடைநடுவே கைவிடப்பட்ட அனைத்து வேலைத் திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.