![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(12) உரையாற்றவுள்ளார்.
"எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்ற இந்த மாநாடு நேற்று(11) ஆரம்பமானது.
இதில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இன்றைய மாநாட்டில் கலந்துகொள்ளும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஜனாதிபதி மொஹமட் பின் சயெத் அல் நஹியனின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உலகத்தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.