அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

by Staff Writer 12-02-2025 | 9:44 PM

Colombo (News 1st) அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்களும் 55 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

அணித்தலைவர் சரித் அசலங்கவுடன் இணைந்து சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கிய Dunith Wellalage 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்து வௌியேறினார்.

46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.

215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் முதலாவது விக்கெட் ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் வீழ்த்தப்பட்டது.

ரம்பம் முதலே இலங்கை அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய அவுஸ்திரேலிய அணி, 33.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளது.