![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயகொடியின் ஆலோசனைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(09) ஏற்பட்ட திடீர் மின்தடையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார்.
குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிலான்த சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
திடீர் மின்தடைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான நீண்ட கால மற்றும் குறுகிய கால பரிந்துரைகளை இந்த குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒருவாரத்திற்குள் இந்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.