பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

by Staff Writer 11-02-2025 | 1:41 PM

Colombo (News 1st) கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரி- 56 ரக துப்பாக்கியுடன் காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலபிடமட பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரி-56 ரக துப்பாக்கியுடன் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த கான்ஸ்டபிள் ஒருவர் துபாய்க்கு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான கான்ஸ்டபிள் கடந்த 08 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையான கடமை நேரத்திற்காக மாலை 5.30 அளவில் துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.