![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) காஸாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போர்நிறுத்தத்தை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் அதனால் மறுஅறிவித்தல் வரை பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகவும் ஹமாஸ் நேற்று(10) கூறியுள்ளது.
இதனை தொடர்ந்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப போர்நிறுத்தம் தொடர்பான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
காஸாவை பொறுப்பேற்பது தொடர்பான தனது தீர்மானம் உறுதியானது எனவும், காஸாவிற்கு வெளியே பலஸ்தீன மக்கள் வாழ்வதற்கு வெவ்வேறு இடங்கள் தெரிவு செய்யப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பலஸ்தீனர்களுக்கு மீண்டும் காஸா திரும்ப முடியாதெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனர்களை ஜோர்தான், எகிப்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாடுகளுக்கான உதவிகளை நிறுத்த நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்பின் காஸா தொடர்பான தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அரேபியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் மனித உரிமை குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.