நால்வர் உயிரிழந்த தோரயாய பஸ் விபத்து

by Staff Writer 10-02-2025 | 2:43 PM

Colombo (News 1st) குருணாகல் - தோரயாய பகுதியில் இன்று(10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் கதுருவெலவிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த பஸ்ஸும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

வேகமாக பயணித்த பஸ், நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 3 ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக குருணாகல் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

விபத்து குறித்து தோரயாய பொலிஸார் அடங்கலாக பல்வேறு விசாரணைக்குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.