ஓய்வுபெற்ற சாரதி, நடத்துநருக்கு மீண்டும் வாய்ப்பு

65 வயதிற்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதி, நடத்துநர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

by Staff Writer 07-02-2025 | 5:01 PM

Colombo (News 1st) 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துநர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடத்துனர்கள், சாரதிகளுக்கு நிலவும் வெற்றிடங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை சேவைகளை வினைத்திறனுடன் நடத்த தடை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.