![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) 1978 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை இன்று(07) முதல் பிரதேச செயலாளர் அலுவலகங்களூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 341 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட பணிக்குழுவினரால் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுச் செல்வதற்கும் அதனூடாக உரிய வகையில் கிடைக்க வேண்டியவர்களுக்கு அந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் இயலுமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.