![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) உப்பின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் விலைகளைக் கருத்திற்கொண்டு விலையை அதிகரிக்க தீர்மானித்ததாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டீ நந்தன திலக தெரிவித்தார்.
400 கிராம் உப்பு பக்கற்றின் விலை 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டி உப்பு பக்கற்றின் விலை 120 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மார்ச் 20 ஆம் திகதிக்குப் பின்னர் பழைய விலைக்கே உப்பை விற்பனை செய்யும் இயலுமை காணப்படும் என தாம் நம்புவதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டீ நந்தன திலக தெரிவித்தார்.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 11,880 மெட்ரிக் தொன் உப்பு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.