Colombo (News 1st) வளி மாசடைவதன் காரணமாக வருடாந்தம் 7 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வளி மாசினால் ஏற்படும் சுவாச நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு சராசரி மனிதன் நாளாந்தம் 8000 இலிருந்து - 10,000 லீட்டர் பிராண வாயுவை சுவாசிப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.