நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை

by Staff Writer 05-02-2025 | 3:09 PM

Colombo (News 1st) நீர் கட்டணத்தை விரைவில் குறைக்கவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் 20 வீதத்தால் குறைக்கப்பட்டமைக்கு அமைய, நீர் கட்டண குறைப்பு வீதம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவருக்கு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அந்த அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, அடுத்த மாதத்திற்குள் நீர் கட்டண குறைப்பு வீதம் தொடர்பில் அறிவிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.