சைபர் பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

சைபர் பாதுகாப்பு சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை

by Rajalingam Thrisanno 05-02-2025 | 9:27 AM

Colombo (News 1st) சைபர் பாதுகாப்பு சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாடு பயணிக்கும் சந்தர்ப்பத்தில் சைபர் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவிக்கிறார்.

இந்த சட்டத்தின் கீழ் சைபர் பாதுகாப்பு அதிகார சபையொன்று உருவாக்கப்படுமென அவர் கூறினார்.