பிரபல வர்த்தகர் கென் பாலேந்திரா காலமானார்

பிரபல வர்த்தகர் கென் பாலேந்திரா காலமானார்

by Staff Writer 03-02-2025 | 3:10 PM

Colombo (News 1st) இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசமான்ய கென் பாலேந்திரா தனது 85ஆவது வயதில் இன்று(03) முற்பகல் காலமானார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் இலங்கையின் முதலாவது தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா நாட்டின் வர்த்தகத்துறையில் புகழ்பூத்த ஒருவராவார்.

அவர் Union Assurance மற்றும் Brandix உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவராகவும் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கை புகையிலை நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்த பாலேந்திரா, 1998 முதல் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வர்த்தகச் சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.

இதனிடையே, பிரபல வர்த்தகர் தேசமான்ய ஹெரி ஜயவர்தன தனது 82 ஆவது வயதில் இன்று(03) காலமானார்.