Colombo (News 1st) புலம்பெயர்வு, சுற்றுலா துறைசார்ந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கையும் இத்தாலியும் விரைவில் கைச்சாத்திடவுள்ளன.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டேமியானோ பிராங்கோவிச் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 2 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வசிப்பதாகவும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 38,709 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.