Colombo (News1st) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய(31) 3ஆம் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழை காரணமாக தடைப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி வீரர்களால் இன்று 27 ஓவர்களை மாத்திரமே வீச முடிந்ததுடன் இலங்கையால் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தது 92 ஓட்டஙகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
13 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த கமிந்து மென்டிஸ் மேலும் 2 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் வௌியேறினார்.
9 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த டினேஷ் சந்திமால் அரைச்சதமடித்தார்.
இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டினேஷ் சந்திமால் 63 ஓட்டங்களுடனும் குசல் மென்டிஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 654 ஓட்டங்களைப் பெற்று நேற்றே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இதன்படி அவுஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இலங்கை அணி மேலும் 518 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
வோர்ன் - முரளி வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்தப்படும் இந்த டெஸ்ட் தொடர் 2 போட்டிகளைக் கொண்டதாகும்.