Colombo (News1) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடந்த 10 நாட்களில் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 167 சந்தேகநபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2561 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 3 ரி- 56 ரக துப்பாக்கிகளும் 03 கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது கடந்த 10 நாட்களில் 462 கிலோகிராம் கேரள கஞ்சாவும் 15 கிலோகிராம் ஹஷிஸ் போதைப்பொருளும் 08 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே இத்தகைய சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதன் முக்கிய நோக்கமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.