75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சிக்கு எதிர்வு கூறல்

75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென எதிர்வு கூறல்

by Staff Writer 22-01-2025 | 6:09 PM

Colombo (News 1st) கிழக்கு, வட மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்றும் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டது.

நாட்டிலுள்ள 56 பாரிய நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட  நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.

60 சிறிய குளங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால் மல்வத்து ஓயாவின் தந்திரிமலை பிரதேசம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

யான் ஓயா பெருக்கெடுத்ததால் ஹொரவப்பொத்தான பகுதியில் சிறியளவில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.