கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்

24 மற்றும் 27ஆம் திகதிகளில் யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்

by Staff Writer 22-01-2025 | 11:16 AM

Colombo (News 1st) எதிர்வரும் 24 மற்றும் 27ஆம் திகதிகளில் யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதால் குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதியும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கடற்படையினரின் பயற்சி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இதனால் குறித்த கடற்பரப்புகளில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.