அனர்த்த இழப்பீடு அதிகரிப்பு

அனர்த்தங்களினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு அதிகரிப்பு

by Staff Writer 22-01-2025 | 6:15 PM

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையினால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர்  இந்த தொகை 250,000 ரூபாவாகக் காணப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இழப்பீடு வழங்குவதற்காக 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

24 மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதமும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு 6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய எந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர  தெரிவிக்கிறார். 

ஏனைய செய்திகள்