Colombo (News 1st) மீண்டும் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போக விளைச்சலை அறுவடை செய்த பின்னர் நாட்டில் காணப்படும் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக பிரதியமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவிக்கிறார்.
சில மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசி ஆலைகளில் காணப்படும் நெல் கையிருப்பை சந்தைக்கு விடுவிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக பிரதியமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
பெரும்போகத்தில் 25 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.