பங்களாதேஷ் எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

by Staff Writer 20-01-2025 | 8:43 PM

Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 91 ஓட்டங்களை பெற்றதுடன் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதேவேளை, நைஜீரியா முதல் தடவையாக 19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் நைஜீரியா டக்வர்த் லுயிஸ் விதுமுறையில் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

13 ஓவர்கள் மட்டுப்படுத்தப்ப்ட இந்த போட்டியில் நைஜீரியா 6 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றது.

66 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணியால் 13 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களையே பெற முடிந்தது.

19 வயதுக்குட்பட்ட 20/20 மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சகல போட்டிகளையும் TV1 தொலைக்காட்சியிலும் www.sirasatv.lk எனும் எமது இணையத்தளம் ஊடாகவும் நீங்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.