வழமைக்கு திரும்பிய ரயில் போக்குவரத்து

வழமைக்கு திரும்பிய ரயில் போக்குவரத்து

by Staff Writer 20-01-2025 | 11:23 AM

Colombo (News 1st) ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் பலர் வினைத்திறன் பரீட்சையில் தோற்றியமையினால் கடந்த 3 நாட்களாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த 3 நாட்களிலும் பிரதான ரயில் போக்குவரத்தை வழமைபோன்று முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறுந்தூர ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.