மரத்தில் மோதி பஸ் விபத்து 14 பேர் காயம்

மரத்தில் மோதி பஸ் விபத்து 14 பேர் காயம்

by Staff Writer 20-01-2025 | 11:15 AM

Colombo (News 1st) சேருநுவர - கல்லாறு இராணுவ முகாமை அண்மித்து இன்று(20) அதிகாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் விபத்துக்குள்ளான போது பயணிகள் 49 பேர் இருந்துள்ளனர்.

பலத்த மழையினால் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணமென பொலிஸார் கூறினர்.