Colombo (News 1st) பொலிஸ் விசேட பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜகத் விஷாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய இந்த நியமனத்தை வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜகத் விஷாந்த இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றினார்.
மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான கடமைகள் அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் H.சமுத்ரஜீவவினால் நிறைவேற்றப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.