Colombo (News 1st) மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகே இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான இராணுவ வீரரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்களில் ஒருவர் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ வீரரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மன்னார் நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் கடந்த 16ஆம் திகதி காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
2 வருடங்களுக்கு முன்னர் நொச்சிக்குளம் பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த சந்தேகநபர்களே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தனர்.