Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75ஆவது வயதில் இன்று(19) காலமானார்.
சுகவீனம் காரணமாக கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று பிற்பகல் காலமானதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ராவய பத்திரிகையின் செய்தி ஆசிரியராக கடமையாற்றிய விக்டர் ஐவன், இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலின் முன்னோடியாக திகழ்ந்தார்.