கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Staff Writer 19-01-2025 | 3:53 PM

Colombo (News 1st) கல்கிசை பகுதியில் இன்று(19) பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

துப்பாக்கிதாரி தப்பிச்செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், தப்பிச்சென்றுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்வதற்கான  பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.