நாணய பரிமாற்றல் ஒப்பந்தம் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கிக்கு இடையிலான நாணய பரிமாற்றல் ஒப்பந்தம் நீடிப்பு

by Staff Writer 18-01-2025 | 7:31 PM

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கிக்கு இடையிலான இருதரப்பு நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மூல ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2024 டிசம்பர் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய 10 பில்லியன் சீன யுவான் ஏறத்தாழ சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரஸ்பர பரிமாற்ற வசதியானது சீனா - இலங்கை இடையிலான நிதியியல் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை மத்திய வங்கியின் சார்பாக ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க மற்றும் சீன மக்கள் வங்கியின் சார்பில் ஆளுநர் பேங் காங் ஷெங் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.