Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இன்று(15) அதிகாலையில் வீடு வடிவிலான மிதவையொன்று கரையொதுங்கியுள்ளது.
இதனை பார்வையிடுவதற்காக அதிகளவிலானவர்கள் நாகர்கோவில் கரையோரப் பகுதிக்கு சென்றிருந்தனர்.
தாய்லாந்து, மியன்மார் அல்லது இந்தியாவில் இருந்து இந்த மிதவை வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
கடந்த வருடமும் இதேபோன்று 2மிதவைகள் கரையொதுங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வட கிழக்கு பருவப்பெயர்ச்சி காரணமாக படகு நாகர்கோவில் பகுதியில் கரையொதுங்கியிருக்கலாம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த மிதவையில் எவரும் பயணிக்கவில்லை எனவும் பூஜை வழிபாடுகளுக்கு இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மேலும் குறிப்பிட்டார்.